திருநீற்றுக்குடுவை

இது தமிழர்களின் மிகவும் பழமைவாய்ந்த ஒரு பாத்திரமாகும். பொதுவாக இந்துக்கள் திருநீறு அணிவதை தமது வாழ்வியல் கோலத்தில் மிக உன்னிப்பாகக் கடைப்பிடித்தனர். “ நீறில்லா நெற்றி பாழ் ” எனும் பழமொழியிலிருந்து இதனை நன்குணரலாம். அதற்குப் பயன்படுத்தப்படும் திருநீற்றை சேமித்து வைப்பதற்காக தென்னஞ்சிறட்டையில் தயாரிக்கப்படும் ஓர் எளிய முறையிலான ஓர்கொள்கலனே திருநீற்றுக் குடுவை என அழைக்கப்படுகின்றது. தேங்காயினை உரித்து அதன் மேற்பகுதியில் கால்வசியை நீக்கி அதன் உள்ளடைகளை நீக்கிவிட்டு , தேங்காயின் கண்ணை துழைத்து அதன் ஊடக சிறு கயிறு ஒன்றினை இட்டு கட்டி விடுதல். அதனுள்ளே திருநீற்றினை இட்டு வைப்பர். பார்ப்பதற்க்கு மிகவும் எளிமையாகவும், செலவற்றவையாகவும், இலகுவானவையகவும் காணப்படும் ஒளிப்படம் : மதன்
வன்னியசிங்கம் வினோதன்