முதுசொம் என்பது, பொதுவாக முந்திய தலைமுறையிலிருந்து கிடைக்கும் சொத்தைக் குறிக்கிறது.
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதி, முதுசொம் என்பதற்கு முதுபொருள், பூர்வீகச் சொத்து எனப் பொருள் தருகிறது.
இதை முதிசம், முதுசம் என்றும் சொல்வதுண்டு.ஒருவர் தான் உழைத்துச் சேர்க்கும் சொத்திலிருந்து இது வேறுபடுகிறது.

”முதுசொம்” தளத்திற்கு உங்களை வரவேற்கின்றோம்.

எமது பாரம்பரியங்களைப் ஆவணப்படுத்தும் முயற்சியே இது
இதற்கு நீங்களும் உங்கலாலான பங்களிப்பை வழங்கலாம்.

மரபு

எப்பொருள் எச்சொல்லின் எவ்வாறு உயர்ந்தோர் செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே
                       (நூற்பா எண் : 387)

என்கிறது நன்னூல். ‘அறிவுடையோர் எந்தப் பொருளை எந்தச் சொல்லால் எந்த முறைப்படி குறிப்பிட்டார்களோ அதே முறைப்படி வழங்குதல் மரபாகும்’ என்பதே இதன் பொருள். சொல்லையும் பொருளையும் மட்டும் அல்லாது அவர்கள் மேற்கொண்ட செயல்களையும் அவ்வாறே பின்பற்றுவதும் மரபே. ‘பண்பாட்டின் எல்லா நிலைகளிலும் மக்களால் பின்பற்றப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட நியதியே மரபு (Tradition).

பாரம்பரியம்

பாரம்பரியம் என்பது நமக்கு முன்னோர்களிடமிருந்து கிடைத்த சொத்து என்று பொருள்படுகிறது. இந்தச் சொல் பல்வேறு விசயங்களையும் விளக்குவதற்கு பயன்படுகிறது. இந்தப் பாரம்பரியம் எந்தவித மாற்றங்களும் இன்றி ஒரு தலைமுறையிடமிருந்து அடுத்த தலைமுறையினருக்கு கொடுக்கப்படுகிறது.பண்பாடு

பண்பாடு என்பது மாறக் கூடியது. தாக்கங்களுக்கு உட்பட்டது. பரிமாற்றங்களை அனுமதிப்பது. வரலாற்றை ஆராயும் போது மாற்றங்கள் அடிக்கடி நிகழ்ந்தன என்று தெரிகிறது.அரும்பொருட்கள் சில...

2018 ஆம் ஆண்டுக்குரிய இவ் இணையத்தள நென்கொடையாளர் - செல்வன்.ச.லவன்

ஒவ்வொரு வருடமும் இவ் இணையத்தளம் தனது கட்டணத்தைப் புதுப்பிக்க வேண்டியிருப்பதால் நீங்களும் அதற்கு நன்கொடை வழங்க முடியும்.